
குஜராத் மாநிலத்தில் கண்காரியா லேக் உயிரியல் பூங்கா உள்ளது. இந்த பூங்காவுக்கு சமீபத்தில் வாலிபர் ஒருவர் சென்ற நிலையில் அவர்புலிகள் வசிக்கும் இடத்திற்கு அருகே பல அடி உயரத்தில் அமைக்கப்பட்ட இரும்பு கூண்டின் மீது ஏறி மரத்தின் மீது ஏறினார். அந்த வாலிபர் புலியை சீண்டி பார்த்த நிலையில் அதுக்கு வேட்டையாடும் எண்ணம் இல்லாததால் அவரை சும்மா விட்டு விட்டது.
அந்த இளைஞரின் செயல்களை அங்கிருந்த ஊழியர்கள் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த நிலையில் அவர் மீண்டும் கூண்டின் மீது ஏறி கீழே வந்தார். பின்னர் அந்த வாலிபரை அங்கிருந்த ஊழியர்கள் பிடித்து சரமாரியாக தாக்கினர். அந்த வாலிபரிடம் விசாரித்ததில் தன்னுடைய காதலியை இம்ப்ரஸ் செய்வதற்காக அப்படி செய்ததாக கூறினார். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
View this post on Instagram