கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணுவாய் பாளையத்தில் விமல் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்க்கிறார். இந்த நிலையில் விமல்குமாருடன் ஒரு இளம்பெண் நட்பாக பேசியுள்ளார். அந்த பெண் கல்லூரியில் படித்து வருகிறார். விமல் குமாரின் நடவடிக்கைகள் பிடிக்காததால் அந்த பெண் அவருடன் பேசுவதை நிறுத்திவிட்டார். ஒரு கட்டத்தில் விமல் குமார் தன்னை காதலிக்குமாறு இளம்பெண்ணை வற்புறுத்தியுள்ளார்.

அதற்கு இளம்பெண் மறுப்பு தெரிவித்ததால் கோபமடைந்த விமல் குமார் அவரை பழிவாங்க திட்டமிட்டார். இதற்காக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 15-க்கும் மேற்பட்ட போலியான கணக்குகளை தொடங்கி இளம்பெண் குறித்து அவதூறான கருத்துக்களை ஆபாசமாக பதிவிட்டு வந்தார். இது பற்றி அறிந்த மாணவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விமல் குமாரை நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.