
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கண்ணங்குடி பகுதியில் மணிகண்டன் (31)-லாவண்யா (20) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஆதிரன் என்ற 5 மாத ஆண் குழந்தை இருந்துள்ளது. இந்த குழந்தை பிறந்த நாளிலிருந்து அடிக்கடி கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதோடு குழந்தைக்கு அடிக்கடி உடல் நலம் சரியில்லாததால் மருத்துவமனையிலும் காண்பித்து வந்துள்ளனர்.
இதன் காரணமாக லாவண்யா தன்னுடைய தாய் பொன்னருப்பு (42) வீட்டில் இருந்தார். இந்நிலையில் கடந்த 6-ம் தேதி திடீரென சில மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து தன்னுடைய தாலிச் செயினை பறித்துக் கொண்டு சென்றதோடு குழந்தையையும் தூக்கிக் கொண்டு சென்றதாக லாவண்யா கத்தி கூச்சலிட்டார். உடனடியாக வீட்டின் அருகே இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்த போது குழந்தை ஒரு நீல டிரம்மில் சடலமாக கிடந்தது தெரிய வந்தது.
இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் லாவண்யாவை பிடித்து கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில் குழந்தையை கொலை செய்ததை ஒப்புக்கொண்டதோடு அதற்கான காரணம் குறித்தும் கூறினார். அதாவது குழந்தை பிறந்த நாளிலிருந்து கணவர் தன் மீது பாசம் காட்டாமல் குழந்தையின் மீது அதிக அன்பு செலுத்தியதால் ஆத்திரத்தில் அந்த ட்ரமுக்குள் போட்டு அமுக்கி குழந்தையை கொன்று விட்டதாக கூறினார்.
அதோடு ஏழு பவுன் தாலிச் செயினையும் வீட்டில் தான் மறைத்து வைத்திருந்ததாக கூறினார். அந்த செயினை போலீஸாரிடம் லாவண்யா கொடுத்தார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்த நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.