டிவி சீரியல் நடிகையான பாவனி ஒரு சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவரும் அமீரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவருமே பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற போது பிரபலமானார்கள்.

இந்த நிலையில் திருமணம் முடிந்தவுடன் ஒரு யூடியூப் சேனலுக்கு அமீர் பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது, ஏதாவது மிகவும் கஷ்டப்பட்ட குடும்பத்தில் இருந்து தான் நான் வந்தேன். படிப்படியாக நடனம் கற்றுக்கொண்டு பல ரியாலிட்டி ஷோப்பில் கலந்து கொண்டேன்.

அதனால் தான் இன்று இந்த நிலைமைக்கு வந்துள்ளேன். எமோஷனலுக்கு அடிமையாகி சில விஷயங்களை இழந்திருக்கிறேன். லேப்டாப் பயன்படுத்துவது தெரியாது. ஆனால் அந்த லேப்டாப்பில் தான் ஒரு வாரத்தில் எடிட்டிங் கற்றுக்கொண்டேன்.

அந்த எடிட்டிங்கில் அடுத்த லெவலுக்கு சென்றேன். ஆனால் அதனை கற்றுக் கொள்ள 4 வருடங்கள் ஆனது. அதுக்கு காரணம் எமோஷனல் பாண்டிங் தான். அது என்னுடைய முட்டாள்தனம் எனக் கூறியுள்ளார்.

ஆனால் எந்த எமோஷனலுக்கு அமீர் அடிமையாக இருந்தார் என்பது பற்றி கூறவில்லை மேலும் தான் இந்த அளவுக்கு வளர்ந்து இருக்கிறேன் என்றால் அதற்கு தன்னம்பிக்கை தான் காரணம் என கூறியுள்ளார்.

அப்படி இல்லை என்றால் என்னை விட தூரத்தில் இருந்த பாவணியை என்னால் திருமணம் செய்திருக்க முடியுமா எனவும் அமீர் கூறியுள்ளார்.