
இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான போது சிவில் சட்டத்தை மத்திய அரசு கொண்டுவர முயற்சி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது முஸ்லிம் மக்களுக்கு எதிரான நடவடிக்கை என்று கருதப்படுவதால் பரவலாக எதிர்ப்பு எழுந்து வருகிறது. இது குறித்து சீமானிடம் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, எப்போது பார்த்தாலும் ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு என்று ஒரே ஒரே என்றுதான் மத்திய அரசு சொல்லி வருகிறது. சரி ஒரே சட்டம் கொண்டு வருகிறீர்களே முதலில் அனைத்து சமூக மக்களுக்கும் ஒரே சுடுகாடு இருக்கிறதா? நாட்டில் அனைவருக்கும் ஒரே குளம் இருக்கிறதா? கோவில் இருக்கிறதா? முதலில் அந்த ஏற்ற தாழ்வுகளை சரி செய்து விட்டு வாருங்கள்.
பிறகு ஒரே சட்டம் கொண்டு வருவது பற்றி யோசிக்கலாம். முதலில் சாதி ஒடுக்கு முறையை ஒழிக்க வேண்டும். இன்றைக்கு மணிப்பூரிலும் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. குக்கி என்ற பழங்குடி கிறிஸ்தவ மக்களை காடுகளில் இருந்து வெளியேற்ற அங்குள்ள கனிம வளங்களை சுரண்டுவதாக மணிப்பூரில் கலவரம் நடந்து கொண்டிருக்கிறது. என்னிடம் நாட்டை கொடுங்கள் அரை மணி நேரத்தில் மணிப்பூர் கலவரத்தை நிறுத்திக் காட்டுகிறேன் என்று சீமான் பேசியுள்ளது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.