உத்தரப்பிரதேச மாநிலத்தின் புலந்த்சாஹர் மாவட்டத்தில் பள்ளியில் இருந்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த மாணவிகளை 2 இளைஞர்கள் தொந்தரவு செய்து வந்தனர். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து துணிச்சலாக செயல்பட்ட அந்த மாணவி , தனது சைக்கிளில் இருந்து இறங்கி தன்னை தொந்தரவு செய்த இளைஞரை சந்தையில் வைத்து பளார்,பளார் என விட்டார் கன்னத்தில்.. “ஒரு நிமிடம் என்ன நடந்தது” என்றே அந்த இளைஞருக்கு புரியவில்லை..

இதையடுத்து இருவருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது, இருப்பினும் மாணவி விட்ட பாடில்லை. பின்னர் அந்த இளைஞர் மாணவியை தாக்கினார், மாணவி திரும்பவும் இளைஞரை தாக்கினார். அருகில் இருந்தவர்கள் இதனை தடுத்து, வழக்கு பிடித்து சமாதானம் படுத்தி அனுப்பி வைத்தனர் மாணவியை…..  ஒரு நிமிடம் அங்கு உள்ளவர்கள் வாயடைத்து நின்றனர்..

இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்துள்ளனர்.

“>