உத்திரபிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்த பெண் ஒருவர் ஸ்னாக்ஸ் சாப்பிடுவதில் ஆர்வம் கொண்டவர். அவர் தன்னுடைய கணவரிடம் ஐந்து ரூபாய்க்கு குர்குரே பாக்கெட் தினமும் வாங்கி வர கூறியுள்ளார். ஆனால் கணவர் மறந்ததால் தாய் வீடு சென்ற அவர் போலீஸில் புகார் அளித்த கையோடு விவாகரத்து பெற்றுத்தர கேட்டுள்ளார். இதனை கேட்ட போலீசார் திருமண பந்தத்தை காக்கும் நோக்கில் இரண்டு பேரையும் கவுன்சிலிங்கிற்கு அனுப்பி வைத்தனர்.