
குஜராத் மாநிலத்தில் உள்ள வல்சாட் பகுதியில் ஒருவர் தையல் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு 89 லட்ச ரூபாய் மின்கட்டணம் வந்துள்ளது. இதனை பார்த்து அந்த நபர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து விசாரணை நடத்திய போது மீட்டர் மூலம் கணக்கெடுத்த போது தவறுதலாக இரண்டு பூஜ்ஜியங்கள் பதிவிடப்பட்டதால் அந்த தொகை வந்தது தெரியவந்தது.
அவர் செலுத்த வேண்டிய மின்கட்டணம் 1540 ரூபாய் மட்டுமே. 89 லட்ச ரூபாய் மின்கட்டணம் செலுத்த வேண்டும் என்ற பில்லை பார்த்து தையல் கடைக்காரர் அதிர்ச்சி அடைந்தார்.