அசாமில் உள்ள காமாக்கியா பீடத்தை சேர்ந்த சாமியார் கங்காபுரி மகாராஜ் (57) இவரை சோட்டு பாபு என்று அழைக்கிறார்கள். இவர் உத்திரபிரதேச மாநிலத்தில் நடந்த மகா கும்பா மேளா நிகழ்ச்சியில் குளிக்கவில்லை. இவர் கடந்த 32 வருடங்களாக தான் குளிக்கவில்லை என்று கூறியுள்ளார். இவர் 3 அடி 8 அங்குல உயரத்தில் இருக்கிறார்.

இவருக்கு 32 வருடங்களாக நிறைவேறாத ஆசை ஒன்று இருப்பதாகவும் அதனால் இதுவரை இத்தனை ஆண்டுகளாக தான் குளிக்காமல் இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் பிரக்யராஜ் நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அனைவரும் கங்கையில் நீராட நிலையில் இவர் மட்டும் குளிக்காமல் இருப்பதால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.