அமெரிக்க தொழிலதிபர் பிரையன் ஜான்சன், தனது உடலில் பிளாஸ்மா மாற்றம் (Plasma Exchange) செய்து, வயதின் வேகத்தை குறைப்பதில் சாதனை படைத்துள்ளார். 45 வயதான இவர், தன் தந்தை ரிச்சர்ட் ஜான்சனின் உடலுக்கு கடந்த வருடம் தன்னுடைய பிளாஸ்மாக்களை பரிமாற்றம் செய்ததன் மூலம், தந்தையின் வயதாகும் வேகத்தை 25 வருடங்களுக்கு குறைத்ததாக கூறினார்.

இந்நிலையில், ஜான்சன் சமீபத்தில் தனது இரத்தத்திலிருந்து அனைத்து பிளாஸ்மாக்களையும் அகற்றி, அதற்கு பதிலாக அல்புமினை (Albumin) எனும் புரதத்தை உடலில் ஏற்றியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த செயல்முறை, Total Plasma Exchange (TPE) என்ற அடிப்படையில் நடைபெறுகிறது.

ஜான்சன் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், இந்த சிகிச்சையை வெற்றிகரமாக நிறைவு செய்ததாக குறிப்பிட்டுள்ளார். “எனது உடலின் பிளாஸ்மா மிகவும் தூய்மையாக இருப்பதாக மருத்துவ நிபுணர் கூறினார்” எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கு 2 மணி நேரமே எடுத்துக் கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.