
மனித உடலுக்கு மிகவும் அத்தியாவாசியமான மற்றும் ஆரோக்கியமான ஒரு பானமாக பால் கருதப்படுகிறது. இரவு நேரத்தில் ஒரு கிளாஸ் பால் குடித்துவிட்டு தூங்குவதை பலரும் வழக்கமாக வைத்துள்ளனர். குழந்தை பருவத்தை கடந்த பின்னர் மனிதர்களை தவிர வேறு எந்த ஒரு மிருகமும் வாழ்நாள் முழுவதும் பால் குடிப்பது கிடையாது. ஆனால் மனிதர்கள் குழந்தையாக இருக்கும்போது தாய்ப்பால் மட்டும் கொடுக்கப்படுகின்றது. அவர்கள் வளர்ந்த பின்னர் ஆடு மற்றும் மாட்டு பால் குடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். மனிதர்கள் மட்டுமல்லாமல் ஆடு, மாடு மற்றும் ஒட்டகம் என இந்த உலகில் சுமார் 6400 பாலூட்டிகள் உள்ளதாக ஆய்வுகள் கூறுகிறது. பால் என்றாலே வெள்ளையாகத்தான் இருக்கும் என்று அனைவருக்கும் தெரியும்.
ஆனால் இந்த உலகில் ஒரு விலங்கின் பால் மட்டும் கருப்பு நிறத்தில் தான் இருக்கும். அதாவது காண்டாமிருகத்தின் பால் கருப்பு நிறத்தில் இருக்கும். அவை ஆப்பிரிக்க கருப்பு காண்டாமிருகம் என அறியப்படுகிறது. ஆப்பிரிக்கா காண்டாமிருகங்களின் பாலில் 0.2% மட்டுமே கொழுப்பு உள்ளது. இதன் பால் தண்ணீர் போல கருப்பு நிறத்தில் இருக்கும். அது மட்டுமல்லாமல் இந்த வகை கருப்பு காண்டாமிருகங்களால் நான்கு முதல் ஐந்து வயது வரை மட்டுமே இனப்பெருக்கம் செய்ய முடிவதுடன் அவை ஒரு வருடத்திற்கும் மேலாக கர்ப்ப காலத்தை அனுபவிக்கின்றது. அதேசமயம் ஆப்பிரிக்க காண்டாமிருகங்கள் ஒரு தடவையில் ஒரு குட்டியை மட்டுமே ஈனும் என்பதும் குறிப்பிடத்தக்கது.