நேற்று ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா மற்றும் டெல்லி கேப்பிட்டல் அணிகள் மோதிக்கொண்டது. இந்த நிலையில் போட்டி நடைபெற்ற போது கொல்கத்தா பேட்ஸ்மேன் ரிங்கு சிங்கை டெல்லி கேப்பிட்டல் அணியின் பவுலர் குல்தீப் யாதவ் கன்னத்தில் அறைந்துள்ளார்.

இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது. அறை வாங்கிய பின்பு ரிங்கு முகம் மாறிவிட்டது. ஆனால் அதை பொருட்படுத்தாமல் குல்தீப் மீண்டும் அவரது கன்னத்தில் அறைந்தார்.

இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. குல்தீப் ரிங்குவை அறிந்ததற்கான காரணம் தெரியவில்லை. குல்தி ஓவரில் ரிங்கு 22 ரன்களை அடித்தது குறிப்பிடத்தக்கதாகும்.