
டெல்லியில் நேற்று கைது செய்யப்பட்ட Redpix யூடியூப் சேனல் ஆசிரியர் பெலிக்ஸ் எங்கு வைக்கப்பட்டுள்ளார் என்பது தெரியவில்லை என அவரது மனைவி குற்றம் சாட்டியுள்ளார். திருச்சி அழைத்து வருவதாக போலீசார் கூறியதாகவும் ஆனால் அதன் பிறகு எந்த தகவலும் இல்லை எனவும் வேதனை தெரிவித்தார். மேலும் சவுக்கு சங்கர் கைதுக்கு பிறகு கையில் காயம் ஏற்பட்டது போல எனது கணவர் உயிருக்கும் அச்சுறுத்தல் இருப்பதாக அவர் அச்சம் தெரிவித்துள்ளார்.