
கர்நாடக மாநிலத்தின் தன்னுடைய சொந்த மாவட்டத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உருக்கமாக பேசினார். அவர் பேசுகையில், எனக்கு உங்கள் வாக்கு கிடைக்கலாம் அல்லது கிடைக்காமல் போகலாம். ஆனால் என்னுடைய நல்ல செயல்களை நினைவுகூர்ந்து என் இறுதி சடங்குக்கு வருவீர்கள் என்று நம்புகிறேன். ‘
என்னுடைய இறுதி ஊர்வலத்தின் போது அதிகமான மக்கள் குவிந்தால் நான் சில நல்ல செயல்களை செய்துள்ளேன் என்பதை மற்றவர்கள் உணர்வார்கள். உங்களுடைய வாக்கு வீண் போகக்கூடாது என்று நான் வேண்டுகோள் விடுகிறேன் என உருக்கமாக பேசியுள்ளார்.