
நடிகை திரிஷா குறித்து பேசியதற்கு நடிகர் மன்சூர் அலிகான் விளக்கம் அளித்துள்ளார்..
அய்யா’ பெரியோர்களே. திடீர்னு திரிஷாவை நான் தப்பா பேசிட்டேன்னு என் பொண்ணு பசங்க, வந்த செய்திகள அனுப்பிச்சாங்க. அடப்பாவிகளா என் படம் ரிலீஸ் ஆகுற நேரத்துல நான் வர்ற தேர்தல்ல, ஒரு பிரபல கட்சி சார்பாக போட்டியிடறேன்னு சொன்ன வேளையில வேண்டுமென நல்லா எவனோ கொம்பு சீவி விட்டிருக்கானுக. உண்மையில அந்த பொண்ண உயர்வாத்தான் சொல்லிருப்பேன். அனுமாருசிரஜ்சீவி மலையகையிலேயே தாங்கிட்டு போன மாதிரி காஷ்மீர் கூட்டிட்டு போயிட்டு வானத்திலேயே திருப்பி கொண்டு வந்துட்டாங்க. பழைய படங்கள் மாதிரி கதாநாயகிகள் கூட நடிக்க வாய்ப்பு இதுல இல்ல. ஆதங்கத்த காமெடியா சொல்லி இருப்பேன். அத கட் பண்ணி போட்டு கலகம் பண்ண நெனச்சா நான் என்ன இந்த சலசலப்புகளுக்கு என்ன அஞ்சரவனா. திரிஷா கிட்ட தப்பா வீடியோவை காட்டி இருக்காங்க.
அய்யா என்கூட நடிச்சவங்கள்ளாம் எம்.எல்.ஏ, எம்.பி மந்திரின்னு ஆயிட்டாங்க பல கதாநாயகிகள். பெரிய தொழில் அதிபர்கள கட்டிட்டு செட்டில் ஆகிட்டாங்க. மேலும் லியோ பூஜையிலேயே என் பொண்ணு தில் ரூபா உங்களோட பெரிய FAN ணுன்னு சொன்னேன். இன்னும் 2 பொண்ணுகளுக்கு கல்யாணம் பண்ணனும். 360 படங்களில் நடிச்சிட்டேன். நான் எப்பவும் சக நடிகைகளுக்கு ரொம்ப மரியாதை கொடுக்கிறவன். எல்லாருக்கும் தெரியும் சில சொம்பு தூக்கிகளோட பருப்பெல்லாம் என்கிட்ட வேகாது. திரிஷாட்ட தப்பா கட் பண்ணி காமிச்சு கோபப்பட வச்சிருக்காங்கன்னு தெரியுது. உலகத்தில எத்தனையோ பிரச்சனை இருக்கு பொழப்ப பாருங்கப்பா. நன்றி மன்சூர் அலிகான்” என தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் மன்சூர் அலிகான் ஒரு முக்கியமான நடிகர். சமீபத்தில் அவர் விஜயின் லியோ படத்தில் முக்கியமான காட்சியில் நடித்திருந்தார். இந்நிலையில் சமீபத்தில் லியோ சக்ஸஸ் மீட்டில் போது திரிஷா கூட நெருக்கமான காட்சிகள் கிடைக்கவில்லை என நகைச்சுவையாக பேசி இருந்தார் மன்சூர் அலி கான். எனவே இது சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதையடுத்து பேட்டி ஒன்றில் த்ரிஷா குறித்து பேசியது சர்ச்சையானது. இது மீண்டும் சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதில், அந்த காலகட்டத்தில் நடித்த காட்சிகள் மாதிரி கிடைக்கலை என்றும், த்ரிஷா குறித்தும் சொல்லி இருந்தார். அந்த வீடியோ வைரலாகி சர்ச்சையானது.. மன்சூர் அலிகான் பேச்சுக்கு திரிஷா, லோகேஷ் கனகராஜ், மாளவிகா மோகனன், பாடகி சின்மயி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.. இந்த நிலையில் தான் மன்சூர் அலி கான் இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.
"When I heard i was acting with #Trisha,I thought there is bed scene in film.I thought,I could carry her to bedroom like I did with actresses in my earlier movies.I have done so many rape scenes & it's not new to me.But they didn't even show her to me on sets."
– #MansoorAliKhan pic.twitter.com/BGkzRNIKsk
— ᴹᴿ᭄ᎷᎧᏂᎥᏖ (@__Mohittt) November 19, 2023
தேர்தலுக்காக இவர் மேல பழி போடுறாங்களாம் 😂 pic.twitter.com/rWIEvZnUww
— Prakash Mahadevan (@PrakashMahadev) November 19, 2023
Mansoor Ali Khan Reply😤#Leo @actorvijay pic.twitter.com/sqj7vQNVpZ
— Mᴜʜɪʟツ𝕏 (@MuhilThalaiva) November 19, 2023