
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் வணிகர் தினத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, நாங்கள் ஏசி அறைக்குள் உட்கார்ந்து அரசியல் செய்யவில்லை. சாதியவாதிகளுடனும் மதவாதிகளுடனும் எந்த சூழ்நிலையிலும் கைகோர்க்க மாட்டோம்.
அதிமுக, விஜய் மற்றும் பாஜக என எந்த பக்கத்தில் வேண்டுமானாலும் கதவுகளை திறந்து வைக்கலாம். ஆனால் அவ்வாறு எந்த கதவையும் நாங்கள் திறந்து வைக்கவில்லை. என்னுடைய 2 எம்பிக்களை பிரதமர் மோடியும் அமித்ஷாவும் வேண்டாம் என்று சொல்லிவிடுவார்களா.?
டெல்லியில் இருந்து உயர் அதிகாரி ஒருவர் எனக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டார். அவர் என்னை பாஜகவிற்கு அழைத்ததோடு பிரதமர் மோடியிடம் நேரில் பேசலாம் என்றார். ஆனால் அவரிடம் அதெல்லாம் வேண்டாம் என்று நான் கூறி கையெடுத்து கும்பிட்டு விட்டேன்.
2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும். முதல்வர் ஸ்டாலின் முதல்வராக வேண்டுமே தவிர சனாதனசக்திகள் வெற்றி பெறக் கூடாது. மேலும் பாஜகவுடன் யார் கூட்டணி சேர்ந்தாலும் அவர்களை நிச்சயமாக நாங்கள் வீழ்த்துவோம் என்றார்.