
கும்பகோணத்தில் நேற்று மாநகராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது திமுக கவுன்சிலருடன் மேயருக்கு மோதல் ஏற்பட்ட நிலையில் திடீரென அவர் நெஞ்சு வலிப்பதாக கூறி தரையில் உருண்டு அலறினார். அதாவது திமுக கவுன்சிலர் குட்டி தட்சிணாமூர்த்தி என்பவருக்கும் காங்கிரஸ் மேயர் சரவணனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் பின்னர் மோதலாக மாறியது.
அதன் பிறகு கூட்டம் முடிந்ததாக கூறி மேயர் தன்னுடைய அறைக்கு சென்ற நிலையில் அவருடைய அறையை பூட்டிய குட்டி தட்சிணாமூர்த்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது மேயரின் மீது ஏறி மிதித்து விட்டு உள்ளே சென்றதாக கூறப்படுகிறது. இதனால் மேயர் தன்னை கொலை செய்ய பார்க்கிறார் என்று கூறி நெஞ்சு வலிப்பதாக கத்தினார். மேலும் இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.