சென்னை தாம்பரம் அருகே சாய்ராம் பொறியியல் கல்லூரியில் ‘லால் சலாம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.  இதில் தனது இரண்டாவது தாய் ஐஸ்வர்யா என ரஜினிகாந்த் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். லால் சலாம் இசை வெளியீட்டில் பேசிய அவர், கடவுள் கிட்ட ஆண் குழந்தை கேட்டால் நீ போ, நீ போ என யாரையாவது அனுப்பி வைப்பார்.

ஆனால் பெண் குழந்தை கேட்டால் அந்த கடவுளே மகளாக வருவார். அப்படி தான் என் இரண்டு மகள்களும் உள்ளனர். அதிலும், ஐஸ்வர்யா எனக்கு தாயை போன்றவர், அவர் இல்லை என்றால் என்னிடம் எதுவும் இல்லை என அவர் தெரிவித்தார்.