வாழை திரைப்படத்தில் நடித்த நடிகை நிகிலா விமல் பல நேர்காணல்களில் சமீபகாலமாக கலந்து கொண்டு பேசி வருகிறார். அதில் அவரிடம் கோளாறாக கேள்வி கேட்பவர்களிடம் பதிலுக்கு கோளாறாக பதில் சொல்லி வருகிறார். அது குறித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. அந்த வகையில் பிரபல தனியா தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் வாழை பட  குழுவினர் செல்ல அவர்களோடு படத்தில் நடித்த நடிகை நிகிலா விமல் அவர்களும் சென்றிருந்தார்.

நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பிரியங்கா அவர் மலையாள நடிகை என்பதால் அவரிடம் மலையாளத்தில் பேச முயற்சிக்கிறார். பதிலுக்கு அவர் எனக்கு தமிழ் நன்றாக தெரியும் நீங்கள் பேசும் மலையாளம் தான் எனக்கு புரியவில்லை என பதில் கொடுத்திருப்பார். இந்த வீடியோ காட்சிகளை தக் லைஃப் தலைவி என குறிப்பிட்டு இணையத்தில் பகிர அது  தற்போது வைரலாகி வருகிறது. 

 

Post by @iamvijaymannai
View on Threads