ரேணுகா சாமி கொலை வழக்கு தொடர்பாக  நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டார். முதலில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்ட தர்ஷனுக்கு சொகுசு வசதி செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்தது. அதன் அடிப்படையில் அவரை பெல்லாரி சிறைக்கு மாற்றினர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கொலை வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில் பவித்ரா கௌடா முதல் குற்றவாளியாகவும், நடிகர் தர்ஷன் இரண்டாவது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் நடிகர் தர்ஷன் தனது அறைக்கு டிவி கேட்டு கோரிக்கை விடுத்தார். இந்த வழக்கு தொடர்பான முன்னேற்றங்கள் குறித்தும் நிகழ்வுகள் குறித்தும் தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் சிறையில் தான் இருக்கும் அறையில் டிவி கேட்பதாக தர்ஷன் கூறியுள்ளார். இந்த நிலையில் சிறை துறை நிர்வாகம் சிறை வழிகாட்டு நடைமுறைகளில் அடிப்படையில் டி.வி வழங்க முடிவு செய்துள்ளதாக சிறை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.