
பெண் காவலர்களை யூடியூபில் அவதூறாக பேசிய குற்றத்திற்காக சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். அடுத்ததாக தன்னுடைய சேனலில் அவரை நேர்காணல் பெலிக்ஸ் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக பேசிய சீமான், தன்னை பற்றி பெண் ஒருவர் தவறாக பேசுவதை யாரும் கண்டு கொள்ளவில்லை. தம்பி சவுக்கு சங்கர் பேசியது தவறுதான். தனிப்பட்ட முறையில் அதனை விளக்க நான் கடமைப்பட்டுள்ளேன். என்னை பற்றி தவறாக ஒரு பெண் 15 ஆண்டுகளாக பேசிக் கொண்டிருந்தபோது நீங்கள் ஊடகவியலாளர்கள், அரசு எல்லாம் அதைப் பற்றி கவலைப்படாமல் கொண்டாடிக் கொண்டுதான் இருந்தீர்கள்.
எனக்கு ஒரு குடும்பம் உள்ளது. எனக்கும் பசங்க, மனைவி, அப்பா அம்மா எல்லோரும் இருக்காங்க அப்படிங்கறது எல்லாம் யாருக்கும் நினைவில்லை. சவுக்கு சங்கர் பேசியது தவறு. அதற்கான கைது நடவடிக்கையை நான் கண்டிக்கவில்லை. ஆனால் குண்டர் சட்டத்தில் போடுவது, கஞ்சா இதெல்லாம் அதிகப்படியாக தெரிகின்றது. அரசின் பழிவாங்கும் நடவடிக்கை இதுதான். பெலிக்ஸ் என்ன செய்தார்? நான் என்னுடைய தலைவரை ஆதரித்து பேசுறனா நான் தான் பொறுப்பு ஏற்கணும். எங்களை விமர்சிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள் என்று சீமான் தெரிவித்துள்ளார்.