தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியின் போது திமுக 200 தொகுதிகளில் வெல்வோம் என்று இறுமாப்புடன் கூறுவதாகவும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் மக்களை அவர்களை மைனஸ் செய்வார்கள் என்றும் கூறினார்.

இதற்கு தற்போது கரு பழனியப்பன் பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கும் ஒரு கட்சி 200 தொகுதிகளில் வெல்வோம் என்று கூறுவதில் என்ன தவறு இருக்கிறது. கட்சி தொடங்கிய உடனே ஒருவர் ஆட்சிக்கு வந்து விடுவேன் என்று கூறுவது தான் உண்மையில் ஆணவப் பேச்சு. நம்பிக்கைக்கும் அதிக நம்பிக்கைக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது என்று கூறினார்.