தமிழகத்தில் சமீப காலமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இது தொடர்பான செய்திகள் நாளுக்கு நாள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தும் நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் கூட மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கிறது. இந்த நிலையில் இன்று சர்வதேச மகளிர் தினத்தை எதிர்க்கட்சிகள் வெளியிட்ட அறிக்கைகளில் பெண்களின் பாதுகாப்பை மையப்படுத்தும் விதமாகவே கருத்துக்களை தெரிவித்தனர். குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் உள்ளிட்ட பலரும் பெண்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக மாறிவிட்டது என்று கூறினர்.

இதற்கு தற்போது அமைச்சர் கீதா ஜீவன் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, திமுக அரசு பெண்கள் வளர்ச்சி அடைய எண்ணற்ற  திட்டங்களை கொண்டு வந்துள்ளது. திமுக அரசு கொண்டு வந்த மகளிர் உரிமைத்தொகை திட்டம் என்பது தற்போது பல மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலமாக தொழில் முனைவோர்களாக திமுக அரசு மாற்றியுள்ளது. மக்கள் மத்தியில் முதலமைச்சருக்கு இருக்கும் நற்பெயரை பொறுத்துக் கொள்ள முடியாமல் இப்படி பேசுகிறார்கள். மேலும் தமிழகத்தில் மகளிர் காவல் நிலையம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் பெண்கள் தைரியமாக புகார் கொடுக்கிறார்கள். மேலும் இதை பொறுத்துக் கொள்ள முடியாமல் தான் எதிர்க்கட்சிகள் பெண்களின் பாதுகாப்பு பற்றி பொய்யான தகவல்களை கூறுகிறார்கள் என்றார்.