
பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதைக் குறித்துத் தவெக தலைவர் விஜய் வெளியிட்ட கருத்துகள் மீது, அமைச்சர் பி.கே. சேகர் பாபு கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர், “விஜய் முதலில் மக்களை நேரில் சந்திக்கும் தனது அரசியல் பயணத்தை ஆரம்பிக்கட்டும். செப்டம்பரில் தான் தொடங்குவேன் என்று அறிவித்தவர், காத்திருந்த தனது தொண்டர்களை சந்திக்கவில்லை என செய்திகள் வந்துள்ளன. முதலில் தன்னையும், தன்னைச் சேர்ந்த இயக்கத்தையும் பார்க்கச் சொல்லுங்கள்” எனக் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், “மக்களை பாதுகாக்கும் வகையில், எங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியாக உள்ளார். எந்த ஒரு வளர்ச்சி திட்டமையும், மக்கள் வாழ்வை பாதிக்காத வகையில், அவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொண்டே செயல்படுத்தப்படுகின்றன. எடுக்கிறேன், கவுக்கிறேன் என்று கடந்த ஆட்சி போல மக்களை பாதிக்கும் திட்டங்களை எங்கள் முதல்வர் நிறைவேற்றமாட்டார்” என வலியுறுத்தினார்.
அதிகாரம் பற்றிய விஜயின் கூற்றுகள் அரைபேச்சாகவே உள்ளது என விமர்சித்த அமைச்சர், “முதல்வரை சந்திக்கவுள்ளதாக கூறும் அவரது பேச்சுகள் அரைக்கூவலாகவே உள்ளன. அவர் அரைக்குள் இருந்தே விட்டுக் கொண்டிருக்கிறார். யாராக இருந்தாலும், எளிதாக கையாண்டுவிடும் ஆளுமை நம் முதல்வருக்கு உண்டு. ஆங்கிலத்தில் சொல்வார்கள் போல, ‘Left hand-la deal’ செய்வார்” எனக் கடுமையாக விமர்சித்தார்.