இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அதில் சில வீடியோக்கள் சிந்திக்க வைக்கும் வகையிலும் சில வீடியோக்கள் வியக்க வைக்கும் வகையிலும் இருக்கும். இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அதன்படி தற்போது வளர்ப்பு நாய் ஒன்று தன்னை வளர்த்தவர்கள் விபத்தில் சிக்கி இருப்பதை அறிந்து அவர்களை காப்பாற்றுவதற்கு தன்னுடைய புத்திசாலித்தனத்தை பயன்படுத்தும் வீடியோ ஒன்றை இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அதாவது சாலையின் அருகே சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென விபத்துக்குள்ளானது. அந்தக் காரில் இருந்த நாய்க்குட்டி ஜன்னல் வழியாக குதித்து அங்கிருந்தவர்களிடம் உதவி கேட்கிறது. காரில் இருந்து குதித்த நாய்க்குட்டி டேகேர் சென்டர் ஒன்றின் முன்பு நின்று கொண்டே உள்ளே இருக்கும் ஊழியர்களின் கவனத்தை ஈர்க்க கீழே படுத்து அதற்கு தெரிந்தவாறு முயற்சி செய்கிறது. இந்த நாய்க்குட்டி செய்த மெய்சிலிர்க்கும் செயல் தற்போது இணையத்தில் வீடியோவாக வைரல் ஆகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

WXYZ Detroit Channel 7 இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@wxyzdetroit)