
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் நடைபெற்ற நிலையில் நேற்று போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. அதாவது காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய நிலையில் 26 பேர் உயிரிழந்த நிலையில் ஆப்ரேஷன் சிந்தூர் மூலமாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. அதன்பிறகு பாகிஸ்தானும் தாக்குதல் நடத்திய நிலையில் இரு தரப்பும் சமாதானத்திற்கு உட்பட்டு தற்போது போரை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக இன்று முப்படை அதிகாரிகள் செய்தியாளர்களை சந்தித்துள்ளனர். இது பற்றி ஏர் மார்ஷல் ஏகே பாரதிக்கு கூறும்போது, கடந்த 7-ம் தேதி இந்தியா தரப்பில் இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் பிறகு 8, 9 ஆகிய தேதிகளில் நம்முடைய எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் டிரோன்கள் பறந்தது.
அவர்கள் நம்முடைய ராணுவ இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்திய நிலையில் அதனை வெற்றிகரமாக முறியடித்து விட்டோம். நாம் அவர்களுடைய பயங்கரவாத முகாம்களை மட்டுமே குறிவைத்த நிலையில் அவர்கள் நம்முடைய இராணுவ தளங்களை குறி வைத்தனர்.
இதனால் பாகிஸ்தானுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டிய சூழல் ஏற்பட்டதால் அதற்காகத்தான் அவர்களுடைய ராணுவ தளங்கள் மீது தாக்கினோம். எந்த இடத்தில் தாக்கினால் அவர்கள் புண்படுவார்கள் என்பதை அறிந்து தாக்கினோம்.
விமான தளங்கள், ராணுவ உள்கட்டமைப்பு மற்றும் கட்டுப்பாடு மையங்களை குறிவைத்து தாக்கினோம். இந்த தளங்களில் ஒவ்வொரு அமைப்பையும் குறிவைத்து தாக்கும் திறன் நம்மிடம் உள்ளது. மேலும் எதிரிக்கு அறிவை புகட்ட வேண்டும் என்ற நோக்கம் மட்டும்தான் நம்மிடம் இருந்தது என்று கூறினார்.
அதன் பிறகு பாகிஸ்தானில் எஃப் 16 விமானத்தளங்கள் நிறுத்தப்பட்டிருந்த இடங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.