பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர் இம்மானுவெல்லா. இந்த பெண் ஒருநாள் பெண் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது இளைஞர் ஒருவர் அவரிடம் இருந்து செல்போனை பறித்து சென்றிருக்கிறார். இதனையடுத்து செல்போனை பறித்து சென்ற அந்த இளைஞர் அப்பெண்ணின் அழகில் மயங்கி தனது மனதை பறிகொடுத்துள்ளார். இதனால் அந்த பெண்ணை காதலிக்க வேண்டும் என்ற ஆசை அவருக்கு வந்துள்ளது.

எனவே அப்பெண்ணை அணுகிய அந்த இளைஞர் உண்மையைக் கூறி தனது காதலை வெளிப்படுத்தி இருக்கிறார். அந்த பெண்ணுக்கும் இளைஞர் மீது ஈர்ப்பு ஏற்படவே இருவரும் காதலிக்க தொடங்கி இருக்கின்றனர். பிரேசில் நாட்டைச் சேர்ந்த இந்த காதல் ஜோடி கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வருகின்றனர்.