
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அடுத்த நகர் ரயில் நிலையத்தில் அதிகாலை 2 பேர் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இரண்டு பேரின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் நடத்தி விசாரணையில் சடலமாக மீட்கப்பட்டவர்கள் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த முகமது ரபிக்(50) மற்றும் செல்வம்(60) என்பது தெரியவந்தது. அவர்கள் தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது தண்டவாளத்தை கடக்கும்போது ரயில் மோதி இருந்தார்களா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முகமது ரபிக் டைலரிங் மற்றும் எம்பிராய்டரி வேலை பார்த்து வந்துள்ளார். அவருக்கு மனைவி மற்றும் மூன்று பிள்ளைகள் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.