இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே தற்போது பார்டர் கவாஸ்கர் போட்டி நடைபெற்றது. இதன் கடைசி டெஸ்ட் போட்டி தற்போது சிட்னி நகரில் நடைபெற்று வருகிறது. இங்கு நடைபெற்ற முதல் நாள் ஆட்டத்தின் இறுதி ஓவரை பும்ரா வீசினார். இந்தப் பந்தை வீசுவதற்கு ஒரு சில அடி தூரம் அவர் தள்ளி வந்த நிலையில் நடுவர் இன்னும் பேட்ஸ்மேன்‌ கவாஜா தயார் நிலையில் இல்லை என்று கூற, என்னப்பா இது என்று கூறுவது போல் இரு கைகளையும் விரித்து காட்டினார். அப்போது அங்கிருந்த கான்ஸ்டாஸ் பும்ராவை ஏதோ சொல்லி சீண்டினார்.

இதனால் கோபமடைந்த பும்ரா பதிலுக்கு பேச உடனடியாக நடுவர் தலையிட்டு அவர்களை அமைதி படுத்தினார். அதற்குள் கடைசி ஓவரை பும்ரா வீசி விக்கெட்டை எடுத்த நிலையில் கான்ஸ்டாஸ் அருகே ஓடி வந்து கத்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்த ஒட்டுமொத்த இந்திய அணியும் வெறித்தனமாக கொண்டாடினர். இது பற்றி தற்போது ‌ ரோகித் சர்மா பேசியுள்ளார். அவர் கூறியதாவது, இந்திய அணியினர் அமைதியாக இருக்கக்கூடியவர்கள். ஆனால் அதே சமயம் தேவையில்லாமல் சீண்டிப் பார்த்தால் சும்மா விட மாட்டார்கள்.

எங்கள் வீரர்கள் எதிரணியினர் அமைதியாக இருக்கும் வரை தான் அமைதியாக இருப்பார்கள். ஒருவேளை நீங்கள் அவர்களிடம் வம்பு இழுத்தால்  நங்கள் சும்மா விடமாட்டார்கள். களத்தில் கிரிக்கெட்டை மட்டும் விளையாடுங்கள். இதுபோன்ற தேவையில்லாத பேச்சுக்கள் நன்றாக இருக்காது. மேலும் எங்களுடைய வீரர்கள் கிளாஸ் நிறைந்தவர்கள் எப்போதும் அவர்கள் தங்கள் வேலைகளில் மட்டும்தான் கவனம் செலுத்துவார்கள் என்று கூறியுள்ளார்.