
சென்னை மாவட்டம் பல்லாவரம் ரயில் நிலையம் அருகே செட்டிகுளம் பகுதியில் உள்ள குளத்தை மக்கள் ஆக்கிரமிப்பு செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு பிறப்பித்தது. இதனால் தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள், தாம்பரம் வருவாய் துறையினர் மற்றும் பல்லாவரம் போலீசார் செட்டிக்குளம் பகுதிக்கு சென்றனர்.முன்னதாகவே செட்டிகுளம் பகுதியில் வாழும் 64 பேருக்கு வருவாய்த்துறையினர் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
இந்த நிலையில் அதிகாரிகள் ஆக்கிரமிப்பு கட்டடங்களை இடிக்க முயற்சி செய்தனர்.அப்போது அங்குள்ள பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இது அரசாங்க நிலம் இல்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, அந்த நிலத்திற்கான ஆதாரங்களை காட்டியுள்ளனர். இது குறித்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய போவதாகவும், அதற்கான கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் பொதுமக்கள் வாக்குவாதம் செய்தனர். எனவே அதிகாரிகள் மக்களுக்கு கால அவகாசம் கொடுத்து விட்டு சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.