
சென்னை தாம்பரம் அடுத்த பதுவஞ்சேரியிலுள்ள அர்ச்சனா பவன் எனும் சைவ உணவகத்துக்கு பிப்,.14 ஆம் தேதியன்று இரவு தாம்பரம் ஆயுத படையை சேர்ந்த காவலர்கள் 2 பேர் மப்டியில் சாப்பிடுவதற்காக சென்று உள்ளனர். அப்போது அவர்கள் மதுபோதையில் சென்றதாகவும் சொல்லப்படுகிறது. சைவ உணவகமான அங்கு அவர்கள் தங்களுக்கு சிக்கன் பிரைட் ரைஸ் வேண்டும் என கேட்டுள்ளனர்.
இதனால் அங்கிருந்த ஊழியர்கள் இது சைவ உணவகம் எனவும் அசைவம் கிடையாது எனவும் கூறியுள்ளனர். எனினும் தங்களுக்கு எக் பிரைட் ரைஸ் வேண்டும் எனவும் முட்டை சைவத்தில் தான் அடங்கும் எனவும் அந்த காவலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. ஒருக் கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதால் ஆயுதபடை காவல்துறையினருக்கும், கடை ஊழியர்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டதில் இருதரப்பினரும் சரமாரியாக தாக்கிகொண்டனர். தற்போது இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏறடுத்தியுள்ளது.
CCTV Video: சைவ கடையில் 'சிக்கன் ரைஸ்' கேட்டு சண்டை போட்ட 'மப்டி' போலீஸ்!
இடம்: அர்ச்சனா பவன், பதுவஞ்சேரி, தாம்பரம். pic.twitter.com/bTGJhD6bt7
— NG Sudharsan (@NgSudharsan07) February 20, 2023