
திருநெல்வேலியில் ஜாதி மறுப்பு திருமணம் செய்து வைத்த காரணத்தால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை சமீபத்தில் 13 பேர் கொண்ட கும்பல் சூறையாடிய சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியது. இந்த சம்பவத்திற்கு பல்வேறு கட்சி தலைவர்கள் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் மார்க்சிஸ்ட் நெல்லை மாவட்ட செயலாளர் ஸ்ரீ ராம், ஜாதி மறுப்பு மற்றும் கலப்பு திருமணங்களுக்கு மற்றும் காதலர்களுக்கு சாட்சி கையெழுத்திட திருநெல்வேலி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் எப்போதுமே திறந்திருக்கும், யார் வேண்டுமானாலும் அணுகலாம் என்று தெரிவித்துள்ளார். தற்போது அவரின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.