
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாகுஷ் கரண் (19) என்ற மகன் இருந்துள்ளார். இவர் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் மின்விசறியை போடுவதற்கு ஸ்விட்ச் போர்டில் கை வைத்துள்ளார், அப்போது திடீரென அவரை மின்சாரம் தாக்கியது.
இதில் பலத்த காயமடைந்து மயக்கமான சாகுல் கரனை உறவினர்கள் மீட்டு அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.