
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த அர்ஷத் நதீம் ஈட்டி எறிதல் போட்டியியல் தங்கப்பதக்கம் வென்றார். அந்நாட்டு தரப்பில் தங்கம் வென்ற ஒரே ஒரு வீரர் அர்ஷத் நதீம் தான். இதனால் அவருக்கு அந்நாட்டு அரசு நாட்டின் உயரிய இரண்டாவது விருது வழங்கப்படும் என்று அறிவித்ததோடு 20 கோடி ரூபாய் பரிசும் அறிவித்தது. அதோடு பல தனியார் நிறுவனங்களும் பரிசு தொகையை அறிவித்தது. இந்நிலையில் அவருக்கு அவருடைய கிராமத்தில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்ட நிலையில் தற்போது அந்நாட்டிடம் பல கோரிக்கைகளை விடுத்துள்ளார்.
ஆனால் அவர் தனக்காக எதுவும் கேட்காமல் தன்னுடைய ஊருக்காக கேட்டுள்ளார். அதாவது தன்னுடைய கிராமத்திற்கு சாலை வசதி மற்றும் சமையல் எரிவாயு இணைப்பு போன்றவைகள் வேண்டும் என்று கேட்டுள்ளார். அதன் பிறகு மியான் சன்னு பகுதியில் ஒரு பல்கலைக்கழகம் இருந்தால் என்னுடைய சகோதரிகள் 2 மணி நேரம் பயணம் செய்து படிக்க வேண்டிய அவசியம் இருக்காது. எனவே அரசு எங்களுக்கு இந்த பகுதியில் ஒரு பல்கலைக்கழகம் அமைத்து தந்தால் எங்களுடைய கிராமத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும். மேலும் இதைத்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.