தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியில் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஒரு புதிய ஆடையை அணிய முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அதில் சிக்கியிருந்த நான்கு சென்டிமீட்டர் நீளமுள்ள ஊசி வாய் வழியாக உடலுக்குள் சென்றுள்ளது. பிறகு அது நுரையீரலில் சிக்கியிருந்துள்ளது. இதனால் கடுமையான மூச்சு திணறல் ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அவருடைய பெற்றோர்கள் சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனை பரிசோதித்த மருத்துவர்கள் நுரையீரலில் ஊசி இருப்பதை செய்தனர். இந்த சோதனையில் அறுவை சிகிச்சை முறையில் மட்டுமே இந்த ஊசியை அகற்ற முடியும் என்ற நிலை ஏற்பட்டது. அப்போதும் மருத்துவ குழு பிராங்கோஸ்கோப்பி என்ற நவீன தொழில்நுட்பத்தின் மூலமாக அறுவை சிகிச்சை செய்யாமல் மூன்றரை நிமிடத்தில் நுரையீரலில் பாதிப்பும் ஏற்படாமல் அவற்றை காப்பாற்றியுள்ளனர். மருத்துவ துறையில் நடக்கும் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக இது சாத்தியமடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.