பொதுவாக சார்ஜ் போடும் போது செல்போன் வெடித்து சிதறுவதை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் பயன்படுத்தாமல் பாக்கெட்டில் வைத்திருக்கும் போது வெடித்து சிதறுவது என்பது மிகவும் அரிதான ஒரு நிகழ்வு. அப்படிப்பட்ட ஒரு சம்பவம் தான் பிரேசிலில் நடந்துள்ளது. அதாவது இளம் பெண் ஒருவர் தன்னுடைய ஆண் தோழருடன் சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்று இருந்தார். அப்போது அவர்கள் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்த போது திடீரென அந்த பெண்ணின் பேண்ட் பாக்கெட்டில் இருந்த செல்போன் வெடித்து சிதறி தீப்பிடித்து எரிந்தது.

அந்த பெண் அலறி அடித்துக் கொண்டே ஓடிய நிலையில் அவருடைய தோழர் தீயை அணைக்க முயற்சி செய்கிறார். இதில் அந்த பெண்ணுக்கு முதுகு உட்பட பின்புறங்களில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.