
இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் 61% ஃபோன் பயன்படுத்துபவர்கள் படுக்க செல்வதற்கு முன்பாகவும், எழுந்ததும் செல்போனை பார்ப்பதாக ஒரு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது இது மிகவும் ஆபத்தானது என்கிறார்கள் நிபுணர்கள்.
போனில் உள்ள எல்இடி விளக்கு கண்களுக்கு ஆபத்தானது. இதனால் தூக்கமின்மை, நரம்பு பிரச்சனைகள் , தோல் பிரச்சினைகள் ஏற்படும். மேலும் காலை எழுந்த உடனே செல்போனை அதிகமாக பயன்படுத்த வேண்டாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். குழந்தைகளுக்கும் இது ஆபத்தை தரும்.