பாகிஸ்தான் மீது தாக்குதல் நடப்பதற்கு ஒரு நாள் முன்பே, இந்திய ரயில்வே துறை ஊழியர்களுக்கு முக்கியமான எச்சரிக்கையை விடுத்துள்ளது. ராணுவ ரயில்கள் இயக்கம் குறித்த தகவல்கள் பாகிஸ்தான் உளவுத்துறையால் கண்காணிக்கப்படக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில், பாதுகாப்பு நடவடிக்கையாக இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கையை, ரயில்வேயின் ஒவ்வொரு மண்டலங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கும் அனுப்பி உள்ளனர். இதில், ராணுவ தேவைகளுக்காக இயக்கப்படும் சிறப்பு ரயில்களின் கால அட்டவணைகள், இயக்கம், மற்றும் பாதைகள் போன்ற ரகசிய தகவல்கள் எந்த அங்கீகரிக்கப்படாத நபர்களுடனும் பகிரக்கூடாது என்றும், இதுபோன்ற பாதுகாப்பு விவரங்கள் வெளிவந்தால் அது தேசிய பாதுகாப்புக்கு நேரடியான அச்சுறுத்தலாக அமையும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரயில்வே ஊழியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்பதும், அதிகாரப்பூர்வ அனுமதியில்லாத யாருக்கும் ரயில்வே ரகசியங்களை தெரிவிக்கக் கூடாது என்பதும் உறுதியாக வலியுறுத்தப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு சூழ்நிலை பதட்டமாக உள்ள நேரத்தில், ஊழியர்களின் கவனக்குறைவால் தவறான தகவல் வெளியீடு நடைபெறக்கூடாது என ரயில்வேத் துறை தீவிரமாக அறிவுறுத்தியுள்ளது.