
பிபிஎஃப் கணக்கு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது PPF சந்தாதாரர்கள் நிதியாண்டின் கடைசி நாளான இன்று குறைந்தபட்சம் ரூ.500 பங்களிப்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இல்லையெனில் அந்த கணக்கு முடக்கப்படும். மறுபடியும் அதை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமெனில், ரூ.50 அபராதம் செலுத்த வேண்டும். அதுபோல குறைந்தபட்ச பங்களிப்பு இல்லாத பிபிஎஃப் கணக்கில் இருந்து கடன் பெறும் வசதியும், பணத்தை திரும்ப பெறும் வசதியும் ரத்து செய்யப்படும்.