
சென்னை வானகரம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டுக்குள் தனியாக புகுந்து, பெண்ணை தாக்கி தங்கச் செயினை பறித்த இளைஞர் சதீஷ் கைது செய்யப்பட்டுள்ளான். இந்த சம்பவம் சம்பந்தமான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி, பொதுமக்களில் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியதையடுத்து, போலீசார் விரைந்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சம்பவம் நடந்ததன்று அதிகாலை நேரத்தில், அந்த இளைஞர் குடியிருப்புக்குள் நுழைந்து, பெண்கள் தனியாக உள்ள வீடாகக் குறிவைத்து காலிங் பெல் அழுத்தியுள்ளார். வீட்டு வாசல் திறந்தவுடன், சில நொடிகள் அந்த பெண்ணுடன் பேசிய பின்னர், திடீரென கதவைத் திறந்து உள்ளே புகுந்து அவரை தாக்கியதுடன், கழுத்தில் இருந்த தங்கச் செயினை பறித்து வெகு சாதாரணமாக நடந்து வெளியேறினார். இந்த வீடியோ அப்பகுதி குடியிருப்பில் உள்ள மக்களிடையே பாதுகாப்பு குறைபாட்டை பற்றிய கவலையையும், பீதியையும் உருவாக்கியுள்ளது.
பட்டப்பகலில் வீடு புகுந்து பெண்ணை அடித்து இழுத்து செயின் பறிப்பு!
பட்டப்பகலில் 10 வது மாடியில் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, பெண்ணை தாக்கி நகை பறித்த சதீஷ் (26) கைது; பாதிக்கப்பட்ட பெண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி..#malaimurasu #viralreeĺs #vanagaram #CCTV pic.twitter.com/5UO4Z71wA7
— Malaimurasu TV (@MalaimurasuTv) April 3, 2025
“>
சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வழக்குப்பதிவு செய்த வானகரம் போலீசார், குற்றவாளியான சதீஷை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். காலிங் பெல் அழுத்தி, வாயில் திறந்தவுடன் வீட்டுக்குள் புகுந்து செயின் பறிப்பது போன்ற சம்பவங்கள் மீண்டும் அதிகரித்துவருவதால், பொதுமக்கள் அதிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும் சமீபத்தில் தனியாக இருக்கும் லாரி ஓட்டுனர்களை குறி வைத்து செல்போன் மற்றும் பணம் பறித்த ரவுடியை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொன்ற நிலையில் இவ்வளவு துணிச்சலாக வாலிபர் கொள்ளை அடித்துள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.