கேரள மாநிலத்தில் உள்ள தாமரை சேரி புதுப்பாடி பகுதியில் விஜயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுப்பாடி பிராந்திய கமிட்டி உறுப்பினராக உள்ளார். இவருக்கு சுதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிக்கு ஸ்டாலின் என்ற மகனும், மும்தாஜ் என்ற மகளும் இருக்கின்றனர். நேற்று இரவு வெளியே சென்று இரவு 11 மணிக்கு சுதா ஸ்கூட்டரில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக அவரது கழுத்தில் அணிந்திருந்த துப்பட்டா ஸ்கூட்டர் பின் சக்கரத்தில் சிக்கியதுn உடனே துப்பட்டா கழுத்தை இறுக்கி கீழே விழுந்து சுதா படுகாயம் அடைந்தர். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுதா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.