திருச்சி மாவட்டத்தில் உள்ள மருங்காபுரி பகுதியில் வெங்கட்ராமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் சிறுமியிடம் செல்போனில் அடிக்கடி பேசி உள்ளார். கடந்த 2020-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி வெங்கட்ராமன் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து அதனை செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார். அதனை காண்பித்து மிரட்டி சிறுமியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மிரட்டலுக்கு பயந்து சிறுமி அதை யாரிடமும் கூறாமல் இருந்துள்ளார்.

இந்த நிலையில் சிறுமியின் குடும்பத்தினர் வேறு ஒரு பகுதிக்கு குடி பெயர்ந்தனர். ஆனாலும் வெங்கட்ராமன் சிறுமியை மிரட்டி அவருக்கு தாலி கட்டி அதனையும் போட்டோ எடுத்து வைத்துள்ளார். தன்னுடன் பாலியல் உறவுக்கு உட்படவில்லை என்றால் போட்டோவையும் வீடியோக்களையும் சோசியல் மீடியாவில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் வெங்கட்ராமனை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.