
சென்னையில் உள்ள திருவல்லிக்கேணி பகுதியில் மணிவண்ணன் (28)-நாகம்மை (35) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் நாகம்மை ஒரு அரசு மருத்துவமனையில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே இருமுறை திருமணம் நடந்த நிலையில் 3-வதாக மணிவண்ணனை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்கள் இருவரும் 10 வருடங்களாக ஒன்றாக வாழ்ந்து வரும் நிலையில் நாகம்மைக்கு இரு குழந்தைகள் இருக்கிறார்கள். இந்நிலையில் மணிவண்ணன் மற்றும் நாகம்மை இருவருக்கும் மது குடிக்கும் பழக்கம் இருந்த நிலையில் இருவரும் தினசரி வேலை முடிந்த பிறகு வீட்டில் ஒன்றாக மது அருந்துவது வழக்கம். அந்த வகையில் சம்பவ நாளில் இருவரும் மது குடித்த நிலையில் மணிவண்ணன் தனது மனைவியை உல்லாசத்திற்கு அழைத்துள்ளார். ஆனால் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அப்போது இருவருக்கும் இடையே தவறாது ஏற்பட்டதால் தன் மனைவியை அவர் தாக்கினார். இதில் ஆத்திரம் அடைந்த நாகம்மை ஒரு கட்டத்தில் என்னுடைய தாலி கயிறை அவிழ்த்து கணவரின் கழுத்தை நெறித்தார். அப்போது மது போதையில் இருந்த மணிவண்ணன் மூச்சு திணறி உயிரிழந்தார். பின்னர் தன்னுடைய உறவினர்களிடம் இந்த தகவலை நாகம்மை தெரிவித்த நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மணிவண்ணனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அங்கு அவர் இறந்து விட்டதாக கூறிவிட்டனர். பின்னர் இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மணிவண்ணன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து நாகம்மையை அவர்கள் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகிறார்கள்.