
அப்பா இன்னும் ஒரு மாதத்தில் சிரிப்பார் என ரோஹித் சர்மாவின் மகள் தெளிவாக சொல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது..
2023 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் ஏற்பட்ட தோல்வி அனைத்து இந்தியர்களின் மனதிலும் இன்னும் எரிந்து கொண்டிருக்கிறது. இந்திய அணியைச் சேர்ந்த பல வீரர்கள் தற்போது தோல்வி குறித்து படிப்படியாக தங்கள் உணர்வுகளை வலியுடன் வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த தோல்வியின் ஏமாற்றத்தை ஒருபுறம் போக்க கிரிக்கெட் வீரர்கள் முயற்சித்து வரும் நிலையில், மறுபுறம் 2வது இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த அணியை சூர்யகுமார் யாதவ் வழிநடத்துகிறார். நேற்று நடந்த முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவை 2 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது.
இதனிடையே இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் மகளின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியாவின் தோல்விக்கு பிறகு ரோஹித் சர்மா அழுததை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பார்த்தனர். இந்நிலையில், இந்த வைரலான வீடியோவுடன் ரோஹித்தை தொடர்புபடுத்தி பேசப்படுகிறது.
இந்த வீடியோவில் என்ன இருக்கிறது?
வெறும் 22 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ எக்ஸ்-இல் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.. இந்த வீடியோ ஹோட்டலில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வீடியோவில், ரோஹித் ஷர்மாவின் மனைவி ரித்திகா மற்றும் அவர்களது மகள் ஒரு பெண்ணுடன் கட்டிடத்தில் இருந்து வெளியே வருவது போல் தெரிகிறது. வீடியோ எடுத்தவர் கேட்ட கேள்விகளுக்கு ரோஹித் ஷர்மாவின் மகள் சமைராவின் அப்பாவி பதில் சமூகவலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
உரையாடல் என்ன?
வீடியோ எடுத்த நபரும் அவர்களுடன் நின்ற சிலரும் சமைராவுடன் அருகில் வீடியோவில்தெரிகிறார்கள். அந்த நபர் “வணக்கம், எப்படி இருக்கிறீர்கள்?” என்று கேட்டார். இந்தக் கேள்விக்கு “கிரேட்” என்று பதிலளித்தார் சமைரா. அடுத்த கேள்வி அவரது தந்தையைப் பற்றியது, அதாவது கேப்டன் ரோஹித் சர்மா. ஆனால் இந்தக் கேள்விகளுக்கு நிதானமாகவும், அதே சமயம் அப்பாவித்தனமாகவும் சிறந்த புரிதலைக் காட்டியதற்காக சமைரா பாராட்டப்படுகிறார்.
“உன் அப்பா எங்கே?” இப்படி ஒரு கேள்வியைக் கேட்டதும் அங்கேயே நிறுத்திவிட்டு விரிவான பதிலைச் சொன்னார் சமைரா. “என் தந்தை அவருடைய அறையில் இருக்கிறார். இப்போது அமைதியாக இருக்கிறார்கள். நேர்மறையானவை. ஆனால் ஒரு மாதத்தில் அவர்கள் மீண்டும் சிரிப்பார்கள்”, என்று பதிலளித்தார் சமைரா! இவ்வாறு கூறிவிட்டு சமைரா தன் தாயுடன் வெளியே சென்றாள்.
ஆஸ்திரேலியா உலகக் கோப்பை 2023 இறுதிப் போட்டியில் வென்றது. இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த பிறகு கேப்டன் ரோஹித் சர்மா கண்ணீர் விட்டு அழுதுகொண்டே ட்ரெஸ்ஸிங் ரூமுக்கு சென்றார். எனவே ரோஹித்தை தொடர்புபடுத்தி இந்த வீடியோ ட்ரெண்ட் ஆனது. அதாவது, ரோஹித் சர்மா இப்போது எப்படியும் தோல்வியின் வலியில் தான் இருப்பார். ஆனால் அப்பா ஒரு மாதத்திற்குள் சிரிப்பார் என்று அவரது மகள் சொன்னதை, இந்த தோல்வியுடன் ஒப்பிட்டு ட்ரெண்ட் செய்கின்றனர். ஆனால் அது உண்மையில்லை.. அந்த வீடியோ இப்போது நடந்தது அல்ல..
வீடியோ சரியாக எப்போது?
இதற்கிடையில், இந்த வீடியோவின் சரியான தேதி வெளியிடப்படவில்லை. இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த ரோஹித் சர்மாவின் கண்களில் கண்ணீர் வழிந்ததை இந்தியர்கள் அனைவரும் பார்த்தனர். எனவே, இந்த வீடியோ இறுதிப் போட்டிக்குப் பிறகு தான் என்று பலர் ஊகித்தனர். இருப்பினும், இந்த வீடியோ சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முந்தையது என்றும், கொரோனா காலத்தை சேர்ந்தது என்றும் தற்போது தெரிய வந்துள்ளது. ரோஹித்தின் உடல்நிலை குறித்த கேள்விக்குத்தான் சமைரா அப்படி கூறியிருப்பார்.
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்யும்போது ரோஹித் கொரோனாவால் பாதிக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ தான் இது. இதனால் தான் ரோஹித் மகள் அப்பா ஒரு மாதத்தில் சிரிப்பார் என்று சொல்லியிருப்பார். மேலும், இந்த வீடியோவில் சமைரா தனது தந்தையின் உடல்நிலை குறித்தும் தெரிவித்து இருப்பதாக தற்போது கூறப்படுகிறது. இந்த வீடியோ, கிரிக்கெட் தோல்வியுடன் தொடர்புடையதாக இருந்தாலும், நம்பிக்கையையும் நெகிழ்ச்சியையும் வெளிப்படுத்துகிறது. இந்த வீடியோவை பார்க்கும்போது கண் கலங்குகிறது..
Rohit Sharma daughter said : He is in a room, he is almost positive & within one month he will laugh again . How cute 😊😊pic.twitter.com/RSupLI1LW0
— ٰImran Siddique (@imransiddique89) November 23, 2023
– Reporter : Where’s your father ?
– Rohit Sharma’s Daughter Samira
Replied : “he is room, he is quite but positive and within one month he will again laugh”My man please back and smile 🥺🙏🏻#RohithSharma𓃵
— 𝐑𝐮𝐬𝐡𝐢𝐢𝐢⁴⁵ (@rushiii_12) November 23, 2023