
அழகி போட்டி வரலாற்றில் முதன்முதலாக இரண்டு திருநங்கைகள் பங்கேற்க இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு நவம்பர் மாதம் 72 வது உலக அழகி போட்டி அமெரிக்காவில் வைத்து நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் 90 அழகிகள் பங்கேற்க உள்ள நிலையில் அவர்களுக்கு போட்டியாக இரண்டு திருநங்கைகளும் களமிறங்குகின்றனர்.
அதில் ஒருவர் விமான பணிப்பெண்ணாக பணியாற்றி வரும் மெரினா, மற்றொருவர் மாடல் அழகியான ரிக்கி கோலே உலக அழகிப் போட்டியில் பங்கேற்க உள்ள இந்த இரண்டு திருநங்கைகளில் ஒருவர் வெற்றி பெற்றால் உலக அழகி பட்டத்தை வென்ற முதல் திருநங்கை என்ற சாதனையை படைக்கலாம்.