உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த மரம் தேக்கு அல்லது சிவப்பு சேந்தன் என்று பலரும் கூறுகின்றனர். ஆனால் இவற்றை விட விலை உயர்ந்த மரம் உள்ளது என்றால் அது மிகையாகாது. அதுதான் அகர்வுட். ஒரு கிலோ முதல் தர மரத்தின் விலை ஒரு லட்சம் டாலர்கள் (சுமார் ரூ.80 லட்சம்) ஆகும். இதன் சிறப்பு என்னவென்றால் இந்த மரம் அலோஸ் என்ற கருப்பு ஒட்டும் பொருளை உற்பத்தி செய்கின்றது. பசை காய்ந்ததும் எரித்தால் இதிலிருந்து வாசனை வரும். அதுமட்டுமில்லாமல் இதிலிருந்து வரும் எண்ணெய் மருத்துவத்திழும்  பயன்படுத்தப்படுகின்றது.