9வது ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. துபாயில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்ட நிலையில் இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அபார வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் சீனியர் வீரரான விராட் கோலி சதம் அடித்து அசத்தினார். இந்நிலையில் விராட் கோலி கிங் என்று அழைக்க தகுதியானவர் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் முகமது ஹபீஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், விராட் கோலி பெரிய இடத்தில் அசத்தக்கூடியவர்.

பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாடும் போது உங்களுக்கு அசத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும். விராட் கோலி காத்திருந்து தருணங்களை பயன்படுத்திக் கொள்கின்றார். தொடர்ந்து நேர்மறையான மனநிலையைக் கொண்டுள்ள விராட் கோலி இந்தியாவுக்காக விளையாடுவது மட்டுமல்லாமல் என்னுடைய நாட்டுக்காக வெற்றியையும் பெற்றுக் கொடுப்பேன் என்று சிந்திக்கின்றார். அதன் காரணமாகத்தான் அவர் உலகின் சிறந்த பேட்ஸ்மேன் என்று கருதப்படுகிறார். எதார்த்தமான வாழ்வில் யாராவது கிங் என்று அழைப்பதற்கு தகுதியானவர் என்றால் அது விராட் கோலி தான். பணத்துக்காக மக்கள் தொடர்பு நிர்வாகிகளை வைத்து கிங்காக வரவில்லை. அவர்களை அழைத்து விராட் கோலியின் செயல்பாடுகளை கண்ணாடியில் காட்டுங்கள் என்று கூறியுள்ளார்.