
கடந்த சில நாட்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் கட்சி தலைவர்கள் பலரும் தங்களது கோரிக்கைகளை முன் வைத்தனர். அதில் பல முக்கிய கேள்விகளை எம்பிகள் எழுப்பினர். அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் பாம்புக்கடியால் சுமார் 50 ஆயிரம் பேர் உயிரிழப்பதாக எம்.பி சரண் கூறினார்.
இதைத்தொடர்ந்து எம்.பி ராஜீவ் பிரதாப் ரூடி கூறியதாவது, பீகார் மிகவும் ஏழ்மையான மாநிலம். இந்தியாவில் மட்டும் 30-40 லட்சம் பேர் பாம்புக்கடியால் பாதிக்கப்படுகின்றனர். இதில் 50,000 பேர் உயிரிழக்கின்றனர் என்று கூறினார். இதில் இந்தியா தான் முதல் இடத்தில் இருக்கிறது என்றார். மேலும் காலநிலை மாற்றத்தால் ஏற்படுகிற தாக்கத்தால் மட்டுமே இத்தகைய சம்பவங்கள் ஏற்படுகிறது என்றும் கூறுகிறார்.