
உலகம் முழுவதும் தற்போது ஏஐ டெக்னாலஜி வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இதன் மூலம் ஒரு கட்டத்தில் மனிதர்களுக்கு கூட வேலையே இல்லாமல் போகலாம் என்று கூறப்படுகிறது. இதனால் ஏஐ டெக்னாலஜியை படித்து வைத்திருப்பது மிகவும் நல்லது என்றும் அந்த டெக்னாலஜி தெரிந்திருப்பவர்களுக்கு தான் எதிர்காலத்தில் வேலை கிடைக்கும் என்றெல்லாம் தகவல்கள் வருகிறது. இந்த ஏஐ டெக்னாலஜிக்கு பலர் வரவேற்பு கொடுத்தாலும் பலர் மனிதர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாமல் போகலாம் என்பதால் அதனை ஆபத்தான ஒன்றாகவே கருதுகிறார்கள். ஏனெனில் ஏஐ டெக்னாலஜி மூலம் பல தவறான செய்திகளை உருவாக்கி அவதூறு பரப்புகிறார்கள். அதே சமயத்தில் ஏஐ டெக்னாலஜி மூலமாக பலவிதமான நன்மைகளும் நடைபெறுகிறது. முன்னதாக உலகின் முதல் ஏஐ பாப் பாடகியை அறிமுகப்படுத்தி அசத்தியிருந்தனர்.
இதைத்தொடர்ந்து தற்போது உலகின் முதல் ஏஐ ஹாஸ்பிடல் சீனாவில் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி முற்றிலும் ஏஐ டாக்டர்கள் கொண்ட Agent Hospital பெய்ஜிங் நகரில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் 14 ஏஐ மருத்துவர்கள், 4 விர்ச்சுவல் நர்சுகள் வேலை பார்க்கிறார்கள். இந்த மருத்துவமனை தொடங்கப்பட்ட சில நாட்களிலேயே 10,000 பேர் வரை சிகிச்சை பெறுகிறார்களாம். இவ்வளவு பேருக்கு சிகிச்சை அளிக்க மனித டாக்டர்களுக்கு குறைந்தபட்சம் 2 வருடங்கள் ஆகும் என்று கூறப்படும் நிலையில் தற்போது ஏஐ மருத்தவர்கள் மிக விரைவாக அதிநவீன சிகிச்சை வழங்கி வருகிறார்கள். மேலும் இனி மருத்துவர்கள் இல்லை என்றாலும் கவலைப்பட வேண்டாம். மனித உயிர்களை ஏஐ காப்பாற்றும் என்று கூறப்படுகிறது. அதே சமயத்தில் இதில் ஆபத்துகளும் இருக்க நேரிடலாம் என்றும் ஒரு கருத்து பரவி வருகிறது.