உலகின் பிரபல முதலீட்டாளரான 94 வயதான வாரன் பஃபெட், தனது நிறுவனமான பெர்க்ஷயர் ஹாத்வேயின் தலைமைப் பதவியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஒமாஹாவில் நடைபெற்ற ஆண்டு கூட்டத்தில் ஆயிரக்கணக்கான பங்குதாரர்கள் முன்னிலையில் இந்த முடிவை வெளியிட்ட பஃபெட், தனது பதவிக்கு துணைத் தலைவர் கிரெக் ஆபெலை பரிந்துரைத்துள்ளார். கடந்த பல ஆண்டுகளாகவே நிறுவனத்தின் பல  முக்கியமான பொறுப்புகளை ஆபெல் ஏற்று  வந்ததாலும், பஃபெட்டின் வாரிசாகவே அவரை நிபுணர்கள் நீண்ட நாட்களாகக் கருதி வந்தனர்.

பஃபெட் பதவி விலகும் இந்த முடிவு முதலீட்டாளர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பலருக்கும் அவர் ஒரு வழிகாட்டியாகவும், நம்பிக்கையின் அடையாளமாகவும் இருந்தார். “நான் ஒரு பங்கும் விற்க மாட்டேன், கிரெக்கின் தலைமையில் நிறுவனத்தின் எதிர்காலம் மேலும் சிறப்பாகும்” என அவர் தெரிவித்துள்ள இந்த வார்த்தைகள், பங்குதாரர்களுக்கு நிம்மதியளித்தன. அவரது ஓய்வு, பெர்க்ஷயர் ஹாத்வேயின் புதிய காலப்பெயர்ச்சி என மதிப்பீடு செய்யப்படுகிறது.